வாழ்க்கைப் பயணம்
நேர்க் கோடல்ல!
வளைந்தும் நெளிந்தும் விட்டுக்கொடுத்தும்
செல்வதாகும்!
வளைவுகள் பொருத்து வாழ்க்கை உருவங்களைப் பெறும்!
கண்டிப்பும் கறாரும்
மிக்க வாழ்க்கை
சதுரமாகும்!
கொஞ்சம் விட்டுக்கொடுக்கையில்
சதுரம் செவ்வகமாய் உருமாறும்!
அன்புமயமான வாழ்க்கையின் உருவம் வட்டமாகும்!
அனைவரையும் அனுசரித்துச் செல்வதே இதன் பண்பாகும்!
பிறரது உரிமையில்
தலையிடும் வாழ்க்கையின் உருவம் முக்கோணமாகும்!
கட்டுப்பாடுகள் வகுத்து வாழும் வாழ்வோ அறுங்கோணமாகும்!
உலகம் ஒன்று!
அதனுள் மக்கள்
வாழும் வாழ்வின் உருவங்களோ பல!
த.ஹேமாவதி
கோளூர்