*எங்கே சென்றாய்*
உள்ளம் குதூகளிக்கிறது
நெஞ்சம் மகிழ்கிறது
உன் பெயரை
உச்சரிக்கும் பொழுதெலாம்;
என் *நா* நடனமிடுகிறது:
ஆம் தோழி!
......என்கிற சொல்-என்
இதயத்தில் இருமாப்பு கொண்டு அமர்ந்து கொண்டது;
நீ
பேசிய வார்த்தைகள் ரீங்காரமாய்;
நீ பார்த்த பார்வை ஓவியமாய்;
நீ சிரித்த சிரிப்பு சிங்காரமாய்;
அகமகிழ்ந்து ஆனந்தமயம் கொள்கிறேன்;
எங்கே சென்றாய்...
முகவரியைத் தொலைத்துவிட்டு முகத்தை மட்டுமே சுமக்கிறேன்....!
தவறென்றால்
கொட்டவும் செய்வாய்
கொட்டவும் சொல்வாய்
ஒருபோதும்
உண்மையை மறைத்ததே இல்லை;
வெள்ளந்தியாய் பேசுவாய்.....
படிக்கின்ற காலத்தில் பண்பாடு கற்றுத் தந்தவளே!
விடுமுறை என்றால்கூட கடிதத்தில் சந்தித்துக் கொண்டளே! உனை நினைக்கும்பொழுதெல்லாம் உள்ளம் குதூகலித்து கும்மாளமிட்டு....கனநேரத்தில் காணாமல் போகிறதே...
உன்னதமாய் நட்புக்கரம் ஏந்தியவளே!
எங்கே சென்றாய்....முகவரியைத் தொலைத்துவிட்டு; முகத்தை மட்டுமே சுமக்கிறேன்:
கரிசல் தங்கம்