Header Ads Widget

Responsive Advertisement

வார்த்தை


பேசும் வார்த்தைகளில் பெரும் கவனம்  செலுத்துவோம். அன்பாய் பேசும் பொழுது  அன்னையாகலாம். அக்கறையுள்ள வார்த்தைகளால் நாம் பிறர்க்குத் தந்தை  ஆகலாம். அறிவுரை கூறும்பொழுது ஆசான் ஆகலாம். மதிப்புமிக்க வார்த்தைகளால் சான்றோர் ஆகலாம்.கனிவான பேச்சினால் மற்றவர்க்கு சகோதர சகோதரி  ஆகலாம்.  கடுமையான. சொற்களைப் பேசும் பொழுது பகைவனாகவும் சூழ்ச்சி மிகு வார்த்தைகளைப் பேசும்பொழுது வஞ்சகர்ஆகவும்ஆகிறோம். மட்டமான வார்த்தை நம்மை மடையராக்கும். எனவே வான்புகழ் வள்ளுவரின் குறளுக்கேற்ப இன்னா நீக்கி இனியவை பேசுவோம்.  இன்பமாய் மலரட்டும் இனிவரும் காலங்கள்.
செ. வினிட்டா.