Header Ads Widget

Responsive Advertisement

பெண்




சிறார் பருவத்தில்
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சியாய்
வலம்வந்து

இளம்பருவத்தில்
இளமை கனவுகளுடன்
வானவூர்தியாப் வானில் வலம் வந்து


ஆயிரம் கனவுகளுடன்
ஆடவன் கை பிடித்து
இல்லற தோட்டத்தில்
விதைக்கிறாள்

ஆயுள் முழுவதும்
தோட்டத்தை பராமரித்தலே
தொழிலாகி போனது

40 வயதிலே
உடல் தளர்ந்து
உள்ளம் உருகி
கணவன் குழந்தை என
அவர்கள் வளர்ச்சியே
கருத்தாய்
பணி செய்து

தன்னலம் மறந்து
கனவு இலட்சியம்
கரைந்து

கடமை ஒன்றே
கண்ணாக
கச்சிதமாய்
செய்து

திரும்பி பார்க்கையில்

வாழ்க்கை  விளிம்பில்
தனியாய் நின்று
அப்போதும்
குடும்ப நலன்
வேண்டி
ஆன்மீக தேடலில்!!!!!!

எங்கே

அவளுக்கான

வாழ்க்கை !!!!!

அம்பை சங்கரி