Header Ads Widget

Responsive Advertisement

பெயரிலென்ன இருக்கிறது ?

ஆதியறியேன்
அந்தமுமறியேன்

இன்பத்துடனோ
துன்பத்துடனோ

வந்தெழுந்து போனவள்
மொழிந்த பெயரில்
பொய்யுமிருக்கலாம்
மெய்யுமிருக்கலாம்

பெயரிலென்ன
இருக்கிறது 
ஆதியும்
அந்தமும்....?

பெயரற்றுக்கிடக்கிறது
ஆதித்துன்பம்
அந்தயின்பம்....!!

*பொன்.இரவீந்திரன்