பொய்கை கரையோரம்
பொழுது சாய்ந்த நேரம் ,
அந்தி மயங்க
வைத்து,
முந்தி வரப் பார்த்தேன்,,,
பந்திக்கு வரத்தானே,,,
என்
செங்காந்தாள்
நீயே,,,,
இளந்
தென்றலோடு நீயாடக் கண்டேன்,,,
இரவாகிப் போனதென
பொன் வண்டாக நின்றேன்,,,
அக்னிசலம் என்றழைத்தேன்,
இலாங்கிலி என்றழைத்தேன், தலைச்சுருளி என்றழைத்தேன்,, கண் வலிப்பூ வென்றும் அழைத்தேன்,,,
இத்தனை பேரழைத்தும் உத்தமி உன் பெயர் மறக்கவில்லை, உரக்க சொல்ல மனமுமில்லை,,,
கார்த்திகைப் பூவாய் பூத்திருக்க,,
கால்கள் கடுக்க,
காத்திருக்க
சுற்றி
திரும்பி வந்தேன்,,,
திரும்பிய வேளையிலே,,, உன் மணம்
பறந்து வர, மணமதில் மயங்கி, கணத்தில் இடம்
கண்டு,
கண்டெனென் செங்காந்தாளை!
ஊருறங்கும் வேளையிலே
கார் குழலால்,
நீ மறைக்க,
போர் தொடுத்த என் மனதை, எதிர்
போர்க்களத்தில் நின்றவளாய்
ரீங்காரம் பாடச் சொல்லி நிலவளை பார்த்தவளாய்,,,,,,
வந்த இடம் நான் மறந்தேன்,
தேன் எடுத்த மயக்கத்திலே, நான்,
செல்லுமிடம் நீயறிய
தென்றலையும் தூதனுப்பு,,,,
நின்ற இடத்தில்
நீ பாடு, நெடுந்தூரம் நான் போக,
சென்ற இடம் சேர்ந்து விட்டால்
பூமழையும் பொழியும் உன் பொன்னிதழும் நனையும்
என்
செங்காந்தாள் மலரே,,,
பாலா