Header Ads Widget

Responsive Advertisement

என்னவளே அடி என்னவளே



மலராத என் காதலின் மொட்டாக இருந்தவளே, எழுதாத என்  கவிதையின் வரியாக இருந்தவளே,
பறக்கவிடாத என் பட்டத்தின் நூலாக இருந்தவளே,
வரையாத ஓவியத்தின் கருவாக இருந்தவளே,
உன் உயிராய் நான் இருந்ததை சொல்லவில்லையே என்கண்ணே.

உனைப் பார்க்காத நாளே பசிக்காத நாளென்று,
உனை நினைக்காத நொடியே நகராத நொடியென்று,
உனைப் பார்த்துநின்ற பொழுதே
எனை மறந்து நின்ற பொழுதென்று,
உன் பார்வை பட்ட கணமே புனிதமான கணமென்று
மயங்கி நின்ற நாட்களை நான் மறக்கவில்லை என்கண்ணே?

பழகத்தெரியாத பருவத்திலே பழகி,
நாணத்தெரியாத பருவத்தில் நீ நாணி,
இரசிக்கத் தெரியாத பருவத்தில் நான் அதை இரசித்து,
பிரிகிறோம் என்று தெரியாமலே பிரிந்து சென்ற அந்த நாளை
நான் மறந்து போவேனா?
நினைக்காமல் நீ இருப்பாயா?
சொல்லடீ நீ என்னவளே.

*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.