பெற்றோர் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
பிள்ளைகள் வாழ்வு இனித்திடும்
பிள்ளைகள் கொஞ்சம் விட்டு க் கொடுத்தால்
பெற்றோர் மனமும் குளிர்ந்திடும்
கணவன் மனைவி விட்டுக் கொடுத்தால்
வாழ்க்கை இன்பமயமாகும்
மதங்கள் எல்லாம் விட்டுக் கொடுத்தால்
மனிதநேயம் பூத்துக் குலுங்கிடும்
மக்களெல்லாம் விட்டு கொடுத்தால்
சுற்றுச் சூழல் சுத்தமாகிவிடும்
மனிதர் உணர்ச்சியை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்
தீவிரவாதிகள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
பல உயிர்கள் பிழைத்துவிடும்
சாதிவெறியர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
நாட்டில் சமரசம் நிலவிவிடும்
பதுக்கல்காரர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
நாட்டில் வறுமை நீங்கிவிடும்
செல்வந்தர் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
ஏழ்மையின் நிலைமை மாறிவிடும்
விட்டுக்கொடுக்கும் பண்பு
எங்கும் எதிலும் வரவேண்டும்
விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை
கெட்டுப்போவோர் விட்டுக் கொடுப்பதில்லை
தி.பத்மாசினி