Header Ads Widget

Responsive Advertisement

ராமன் வேசம் போடும் பல ராட்சஸருக்கும் என்னைத்தெரியும்!!!

ராமன் வேசம்
      போடும் பல
ராட்சஸருக்கும்
என்னைத்தெரியும்!!!
பெண்விடுதலை பேசும் பல
பெரிய மனிதர்கள்
விருந்தினர்
       மாளிகையில்
நிரந்தர விருந்து
                     நான்!
என்னிடம் கடன்
சொல்லிப்போன
கந்துவட்டிகார்
ஏராளம் ஏராளம்!!
சாதி சாதி எனச்
சாகும் பலரும்
என் சாதி நினைப்பின்றி
உழளுவார்!!!!
தினம் தினம்
திருந்தி நான்வாழ
துணிந்த போதும்
எனைத்தீண்டிய
எவரும் திரும்ப
விட்டதில்லை....
பத்திரிகை களும்
விபச்சாரிகள் கைதுஎனச் சொல்லித்தானே
விற்பனையைக்
கூட்டுகின்றன??
கூட இருந்த விலங்குகளின்
விவரம் கூட
வெளிவராததேன்?
பெண்களின்
புனிதத்தை விட    
                      சில
ஆண்களின்
புனிதம்அவ்வளவு பெரியதா?
காய்ந்தவயிற்றுக்
                             கு
காட்டில் இரைதே
                        டும்
குருவியைபோன்
                          ற
என்மேல் யாரும்
பரிதாபப்படவில்
                        லை.
மாறாக கட்டிலில்
                        ஒரு
கருவியாகத்தான்
கையாளுகிறார்க
                             ள்.
இருட்டில் நான்
பிணமாக
      மாறினால்தா
                           ன்
பகலில் அது
பணமாக மாறி
என்குழந்தைகள்
பசியாற்றும்.......
நிர்வாணமே என்
நிரந்தரவுடையான
                         தால்
சேலை எதற்கென
  நினைத்ததுண்டு
ஆனால் காயங்க
    ..                   ளை
மறைக்க வேண்டி
உள்ளதேஎனவே கட்டிகொண்டேன்!
வரிசையாய்மேனி
தழும்புகள்காண
வரிகுதிரைக்கும்
மூச்சடைக்கும்...
தூரல்சிந்தாத மேகமும் உண்டு!
ஆனால்
கீரல் படாத தேகம்
எமக்கில்லை,,...
வேசியென என்ன
ஏசுமெவர்குறித்து
                          ம்
எனக்கு கவலை
                 இல்லை,
ஏனெனில்.... விதவை,வேசி ,
முதிர்கன்னி ,மலடி,
வாழாவெட்டி,
ஒழுக்கங்கெட்டவ,
ஓடுகாலி ,என
இதில் ஏதேனும்
ஒருபட்டம்
அனேகப்பெண்களுக்கு
சமூகம் தந்திருக்கும் இது
இல்லாமல் பெண்களில்ல!
இந்த இழிவு ஆண்களுக்கில்ல!
முதுமையெனை
முத்தமிடுமுன் என்
மகள் மருத்துவர்
ஆகவேண்டும். என்மீது படிந்த
தூசிகளை அவள்
வெள்ளுடையில்
துடைக்கவேண்டு
                             ம்.
ஆயினும் இந்த
                 சமூகம்
அவளை மணிமேகலை என
           என பாராது,
மாதவியின் மகள்
எனறே ஞாபகம்
வைத்திருக்கும்...
இறுதியாக
எனைமென்று
தின்ற ஆண்களே!
உங்கள் மனைவியிடமாவது
மென்மையாக
நடந்து கொள்ளுங்கள்.


இது வெறும் கற்பனை கவிதை அல்ல."என் பெயர்
கமலா"(புஷ்பா தங்க துரை) படித்த போது என் இதயம் வடித்த சென்னீர் துளிகள்.
தவறிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

கண்ணீருடன்
          வத்சலா