பணத்தைக் கொடுத்து ஒருவன்
மிருகமாக மாறுவதையும்
அதே பணத்தைப்
பெறுவதற்காக
ஒருத்தி பிணமாக
மாறுவதையும் இரவுகள்தோறும்
கண்டு
நகைப்பும் திகைப்பும் கொள்கிறது விலைமகளின் கட்டில்.
********************
தவிப்பு.
மஞ்சள் பூசிய
முகத்தில்
குங்குமம் இட்டாயிற்று.
சரிபார்த்துக் கொள்ள
முகம்பார்க்கும்
கண்ணாடி இல்லாமல் தவித்தன வாசக்கால்கள்.
த.ஹேமாவதி
கோளூர்