தாயின்
மறுபிறவியாய்
என்னுள் வந்தவளே
தவழ்ந்து சிறகடித்து
வண்ணத்துப்பூச்சியாய்
புகுந்த வீட்டில்
புன்னகையில்
பூத்தவளே
இன்று
என் வாழ்வின்
துணையாய்
வந்தவளே
நீ
பிறந்த தருணம்
என் பிறப்பினை
உணர்ந்த நாள்
என்னவளே
என்னுள் பிறந்தவளே
உன் பிறப்பைக்
கொண்டாட
உலகத்திலுள்ள
மொத்த பூக்களையும்
குத்தகைக்கு எடுத்து
உன் வரவை
வானிலுள்ள
நிலவுக்குத் தூது அனுப்புவேன்..
உன் பிறப்பை
விட
எதுவும் அழகில்லையென்று..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..