Header Ads Widget

Responsive Advertisement

நோக வைக்கும் சுமை

பாவங்களைச்
சுமந்தபடி
நகர்கிறேன்

ஆயினும்
சுமத்தலாலோ
நகர்தலாலோ
நத்தையில்லை நான்

நான்
நீயாகவுமிருக்கலாம்
நீ
நானாகவுமிருக்கலாம்

ஆகப்பெரும் வாழ்வில்
இறப்பின் நொடியிலும்
நோக வைக்கும்
சுமை

*பொன்.இரவீந்திரன்