Header Ads Widget

Responsive Advertisement

கொண்டாடுவோம்

!

விழிதீபத்தால்     மன இருளை விரட்டுவோம்! புன்னகைமத்தாப்பை
ஏற்றி அனைவரையும் கவர்வோம்!
உள்ளொன்று புறமொன்று வைக்காமல் பட்பட்டென்ற  பட்டாசுப் பேச்சு பேசி
இயல்பாய் பழகுவோம்!
வானத்தில் சீறிப்பாய்ந்து வர்ணஜாலம் நடத்தும் வாணவேடிக்கைகளாய்
உயரிய சிந்தனையால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வோம்!
தரைச் சக்கரங்கள் தரையிலே சுடர்வீசிச் சுழல்வது கண்டு பேருவகைக் கொண்டு மகிழ்வதுபோல அடித்தட்டில் வாழும் எளியோர்க்கும் தீபாவளிஇன்பத்தைக் கொடுக்க
நாமும் இயன்றவரை உதவி
அவர்கள் முகத்திலும் தரைச்சக்கரத்தின் ஒளிச்சுடர்களைச் சுழலச் செய்வோம்!
மனப்பூந்தொட்டிகளை
நல்லெண்ணத் தீயால் ஏற்றி
வண்ணச்சுடர்களை
வான்முட்ட உயர்த்தி
அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்!
அதன்பிறகு
ஆனந்தமாய்க் கொண்டாடுவோம் தீபாவளியை!

த.ஹேமாவதி
கோளூர்