இருளைப் போக்கும் ஒளிகள் எல்லாம் விளக்கிற்கு சொந்தம் என்றார்கள்,,,
விளக்கும் ஒளியும் சேர்ந்ததினால்
"தீப ஒளி"யும் என்றார்கள்,,,,
கருணைக் கடலும் இரவினில் தெரிய கலங்கரை விளக்கம் தந்தார்கள்,,,
உண்மையை சொல்லி நின்றவரெல்லாம்
தீப ஒளியாய் ஆனார்கள்,,,,
ஒளிகளைக் கொண்ட நாட்களை எல்லாம்
சிறப்பாய் நடத்தி வந்தார்,,,,
இளையோர் இன்றும் வலம் வரத்தானே
பெரியோர் முன்னே நின்றார்கள்,,,,,
தீப ஒளியின் திருநாள் என்றால்
மலர் முகத்துடனே நாம் காண, அந்நாளையும் நன்றாய் கொண்டாட,
புத்தாடைகள் பலவும் அணிந்திட்டு வந்து அருகில் நின்று மகிழ்ந்தனரே,,,,
சேர்ந்திட்ட சொந்தம் தொடர்ந்திடத் தானே பிரிந்தவரெல்லாம் விளக்கேற்றி,,,,
பல காராங்கள் கொடுத்து, பண்பையும் வளர்த்து,
ஒன்றாய் மகிழ்ந்து வந்தனரே,,,,
தீப ஒளியில்
ஒளிர்ந்திட்ட வாழ்வு
நிலைத்திடும் என்றும் நன்றாக,,,
இதை பெரியோர் அனைவரும் சொன்னார்கள்,,,
நிலைத் திட்ட வாழ்வில்
தீப ஒளியாய் நாமும் நிற்போம் என்றும் ஒன்றாக,,,,
- பாலா