முந்தானையில் குடை பிடித்தாய்
ஆனாலும் நீ நனைந்தாய்
எப்படியோ என் பசிதீர்த்தாய் நீ பசித்திருந்தாய்
வேலை செய்த இடத்தில் கிடைத்த சேலையினை அணிந்தாய்
முதலாளி மகனின் பத்தாத சட்டை வாங்கி எனக்கு புத்தாடை செய்தாய்
உன் கழனி கூலியில் தான் எனை கல்லூரி சேர்த்தாய்
உன் அரை வயிற்று காலியிடத்தால் தான் எனக்கு விடுதியில் அறை வாங்கி கொடுத்தாய்
கை நிறைய சம்பாதிக்கிறேன் ஆனாலும் நீ என் வயிற்றைத்தான் தொட்டுப் பார்க்கிறாய்
அதனால் தான் நீ தாய்..!