Header Ads Widget

Responsive Advertisement

வாழ்ற சந்தோசம் நமக்கு போதுமே...!

என்னடா
செய்றதுனு
தெரியல
நாளைக்குத்தீபாளி
புள்ளங்க
புதுத்துணி
கேட்பாங்க
கையில
காசு இல்ல
சொல்லவும் முடியல
மெல்லவும் முடியல
வாழ்க்கையே
கடைசி வரைக்கும்
வறுமையில
வாடுற
நிலமயில
நிக்க வச்சி
வேடிக்க
பாக்கும் கடவுளுக்குத்
தெரியல
குழந்தைங்க
மனசு
தவிக்குமுன்னு..

தெரிஞ்சா
நமக்கு
நல்ல வழி
காட்டுவாருனு
எத்தனையோ
குடும்பங்கள்
ஏங்கி தவிக்கும்
போது
நமக்கிந்த
தீபாவளி
பரவாலனு
மனச தேத்திக்கிட்டு
வாழ்ற
சந்தோசம் நமக்கு
போதுமே...!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..