மீண்டும் ஒரு திருவிழா கொண்டாடியாகிவிட்டது,
கொண்டாடும் வேளையிலே சில எண்ணங்கள் உதித்தது.
உறவோடும் நட்போடும் கொண்டாடுவதுபோன்று,
உணர்வோடும் உயிர்ப்போடும் கொண்டாடப்படுமென்றால்,
சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவதுபோன்று,
நிறைவோடும் சிரிப்போடும் கொண்டாடப்படுமென்றால்,
பட்டாசு இனிப்போடு கொண்டாடுவது போன்று,
மட்டில்லா மகிழ்வோடு கொண்டாடப் படுமென்றால்,
கடன்பட்டு சிரமத்தோடு கொண்டாட முயலாமல்
இருப்பதைக் கொண்டே கொண்டாடப்படுமென்றால்,
வேற்றுமைகளை சற்றே ஓரமாய் ஒதுக்கிவிட்டு,
ஒற்றுமையோடே கொண்டாடப்படுமென்றால்,
மேலும் பல திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்வோம்,
திண்டாட்டமில்லாமல் கொண்டாடி மகிழ்வோம்.
*சுலீ. அனில் குமார்.*