கண்ணுக்குத் தெரியும் வேர்கள் பெரிதா?
அன்றி கண்ணில்
புலனாகும் விழுதுகள் பெரிதா?
அடி மரத்திடம் வந்தது பஞ்சாயத்து.
இளமையில் இருக்கையில் எனைத் தாங்கியது வேராகும்!
என்கிளைகளாம் கைகள் என்னைத்
தாங்கிட ஆனதே விழுதுகளாய்!
இளமையில் வேரும்
முதுமையில் விழுதும்
தாங்குவதால்
உங்களுக்குள் பேதங்களில்லை எனத்தீர்ப்பளித்தது
அடிமரம்!
த.ஹே
கோளூர்
