Header Ads Widget

Responsive Advertisement

சர்.சி.வி.இராமன் பிறந்த தின கவிதை

கண்ணுக்கு விருந்தாகும் வானத்தின் அழகு!

அதற்கு மேலும் மெருகூட்டும் நீலவண்ணத்தின் சேர்ப்பு!

விரிவானின் நீலத்தை ரசிப்பவர் மத்தியில்

விரிபுலமையால் அதன் காரணத்தைக் கண்டவர் நமது சர்.சி.வி.இராமன்.

ஆகாயத்தின் நிறமும்

ஆழ்கடலின் நிறமும்

இவரது ஆய்வால்

தெளியப்பட்டது.

இராமன் கோடுகள்

இராமன் விளைவுகள்

என்றே உலகம்

முழுவதும்

வான்புகழ் கொண்டார்.இந்தியர்க்கு

பெருமைகள் சேர்த்தார்!

ஆராயும் அறிவுள்ளோர் யாரெனக் காண்போம் மாணவருள்ளே!

சர்.சி.வி இராமனாய்

அவன் ஆகிட

வழிவகை செய்வோம் நம்

ஆசிரியப் பணியிலே!


த.ஹேமாவதி

கோளூர்