ஓய்வற்ற
கோப்பையும்
காற்றில்
கரையும் புகையும்
அவமானங்களையும்
துரோகங்களையும்
தனித்தவொரு அமர்வில்
நிலை நிறுத்திக்
கண்ணீரில்
கரைத்த வண்ணம்
காலத்தை
உமிழ்ந்தபடியே
கடக்கின்றன
அன்றாட
நிகழ்வின்
அத்தனை
நொடிகளும்....
*பொன்.இரவீந்திரன்*