தேனுண்ட வண்டும், பூமணத்தை
கண்டும்
தேன்,
எடுக்காமல் போகாதடி
செல்லம்மா,,,
நானென்று
வ.ந்தும்
உன் வரவை கண்டும்
மனம் பேசாமல் கூடாதடி செல்லம்மா நீ பேசாமல் கூடாதடி,,,
தென்னை மரத்தோரம் இளமாலை நேரம் நிழலுந்தான் ஆடுதடி, செல்லம்மா,,,,
நிழலுந்தான் ஆடுதடி,,,,
சுகமான வார்த்தைகள் மெய்யாகி மேலேறி
கொடியைத் தான் காட்டுதடி செல்லம்மா
பச்சை
கொடியைத் தான் ஆட்டுதடி,,,,,
இரவுக்கும்
நிலவுக்கும்
உறக்கமில்லை
செல்லம்மா
உறக்கமில்லை
உன் நினைவுகள் எனக் கொன்றும் மறக்கவில்லை செல்லம்மா மறக்கவில்லை
உன் அழகுக்கு மலரொன்றும் விளக்கமில்லை செல்லம்மா விளக்கமில்லை
என் மனதிலும் துளியொரு கள்ளமில்லை செல்லம்மா கள்ளமில்லை,,,,
நான் காத்திருந்தேன் செல்லம்மா காத்திருந்தேன் வழி பார்த்திருந்தேன் செல்லம்மா பார்த்திருந்தேன்,,,
நேற்றில்லை இன்றில்லை செல்லம்மா
அது நிலவன்றி
யாரறிவார்
சொல்லம்மா,,,,
நான் காத்திருந்தேன் செல்லம்மா காத்திருந்தேன் நல்ல பதில் நீயும் வந்தெனக்கு சொல்லம்மா கொஞ்சம் செல்லம்மா,,,,
பாலா