இயற்கை நமக்கு கொடுக்கும்
இலவசம் ஏராளம் ஏராளம்
அதை மற்றவர்கள் அனுபவிப்பது தாராளம் தாராளம்
இயற்கை தரும் இலவசத்தை
மனிதன் ஆக்கினான் தன்வசம்
இலவசம் பிறர்வசம் இருந்தால்
அது உனக்கு அடிமை
அது உன்வசம் வந்தால் அதற்கு நீ அடிமை
இலவசம் உன்வசம் வந்தால்
போய்விடும் உன் பரவசம்
மாணவர்களுக்கு தந்த இலவசம்
அவர்களை விலக்கியது கல்வி வசமிருந்து
அரசியல்வாதிகள் தருவதும் இலவசம்
அதை வாங்கினால்
இனி நீ அவர்கள் வசம்
இலவசத்தை வெறுத்திடுவோம்
உழைத்து நாமும் உயர்ந்திடுவோம்
இல்லாதவர்களுக்கு ஈந்திடுவோம்
தி.பத்மாசினி