Header Ads Widget

Responsive Advertisement

தீபாவளி நல்வாழ்த்துகள்



கோவிலுக்குச் செல்வதை விட்டுவிட்டு, திரைப்படம் பார்த்து மகிழ்ந்திருந்தோம்.

ஒளிதந்த தீபத்தை மறந்துவிட்டு,
வெடிவெடித்துக் கொண்டாட ஆரம்பித்தோம்.

சிவகாசிப்பட்டாசை ஒதுக்கிவிட்டு, சீனப்பட்டாசுகளை வாங்கிவந்தோம்.

வீட்டுப்பலகாரங்களை விலக்கிவிட்டு,
இனிப்புக்கடைகளில் சரணடைந்தோம்.

உறவோடு கொண்டாடுவதைத் தவிர்த்துவிட்டு, தனியாகக் கொண்டாடி மகிழ்ந்து நின்றோம்.

கொண்டாட்டங்களின் அருமையை உணராமல்
பெருமைக்காக மட்டுமே கொண்டாடிநின்றோம்.

பழமையை மறக்காமல் புதுமையைப் புகுத்தி,
நல்லதே நினைத்து நல்லதைச் செய்து, நல்ல ஒரு தீபாவளி கொண்டாடி மகிழ்வோம்.

தின்மைகள் அகன்று நன்மைகள்  நிறைந்து,
நலமுடன் வாழ்ந்திட
வாழ்த்தியே மகிழ்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சுலீ அனில் குமார்