சுதந்திரத்திற்காக போராடினார்கள்
வெள்ளையனை விரட்ட போராடினார்க
தீண்டாமையை ஒழிக்க போராடினார்கள்
சமூகநீதிக்காக போராடினார்கள்
பெண் கல்விக்காக போராடினார்கள்
பெண் உரிமைக்காக போராடினார்கள்
இட ஒதுக்கீட்டீற்காக போராடினார்கள்
ஈழத்தமிழருக்காக போராடினார்கள்
வறுமைக்காக யார் போராடினார்கள் ஏழையைத் தவிர
வறுமை க்கு ஏழையிடம் வசதி அதிகமாக கிடைப்பதால்
அவனை விட்டுச்செல்ல அதற்கு மனமில்லை
அங்கு வசதியாய் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது
வறுமை ஏழையை வெறுமையாக்கிவிடும்
வறுமை யை ஒழிக்க
சட்டங்களாலும் முடியாது
திட்டங்களாலும் முடியாது
வறுமை ஒழிய
ஏழைகள்
சோம்பலை முறித்து
தன்னம்பிக்கையை ஆயுதமாக்கி
முயற்சியை மூலதனமாக்கி
உழைப்பை உரமாக்கி
முயன்றெழுந்து உழைத்தால்
வறுமை வாடி வதங்கி
வந் சுவடு தெரியாமல் சென்றுவிடும்
நல்ல மனம் படைத்தவர்கள்
ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திற்கும் உதவி செய்தாலும்
வறுமை ஒழிந்து
செழுமை ஓங்கும்
தி.பத்மாசினி