பூமிக்கு வரத்தயங்கிய
மேகம் விசும்பியது
அவ்விசும்பலின்
ஒருதுளியாக தன்னந்தனியாக
பூமிநோக்கி பயணித்தேன் பயத்துடன்..... சிந்தனைகள் சிதறியது எனக்கு
மண்நோக்கி நகர்ந்தது சரியோ?
மரிப்பேனோ?
மண்தொட்டு
உயிர்ப்பேனோ???
எரிதழலாய் பூமி
வீசும் அனலிடை
வீழ்ந்து ஏதுமின்றி போவேனோ???
நீரில்பூத்த மலரில்
சேர்ந்து இனிய செந்தேனாய்
மாறுவேனோ???
வேகமெடுத்து
வீசியகாற்றுஎனை
வாரியெடுத்து
கடலோரம்சேர்க்க..
வாய்பிளந்த சிப்பி
க்குள்
அடைக்கலமானே
ன்!!
விழிமூடினேன்
நிம்மதியாக...
விழிதிறந்தேன்
ஒளிரும் முத்தாக!!!
ஓரிடம் நீங்கி
மாறிடம்போக மன
மற்றோரே.....
யாரிடம் உமது
சேரிடம் என்பதை
தெய்வவசம் ஒப்பு
வித்தால்....
ஒளிர்வீர் நீரும்
முத்தாக!
சேரிடம் விசும்பின்
சிறுதுளியைமுத்
தென
மாற்றிடும்போது....
ஏற்றவாழ்வை தெய்வமே சேரிடம்!!!!!
வத்சலா