வஞ்சம் தீர்க்க
வாழும்
மனிதர்களிடம்
நெஞ்சம்
வாழ்வதில்லை..
பஞ்சம் தீர்க்க
வந்தவர்களிடம்
நெஞ்சம்
வீழ்வதில்லை..
பகையை மட்டும்
பரிசாகக்
கொடுப்பவர்களுக்கு
வாழ்க்கையும்
தரிசாகவே
அமையும்
அதில் நிம்மதியும்
தொலையும்..
எல்லோருக்கும்
ஒருநாள்
மண்ணுக்கு
இரையாவோம்
எனத்தெரிந்தும்
மனிதனை
மண்ணில்
வீழும் வரை
வஞ்சத்தில்
நெஞ்சத்தை நிறைத்துக்கொள்ளும்
மானிடனுக்குத்
தெரிவதில்லை..
வாழும் வரை
மனிதனின்
தாழும் நிலை
வந்தால்
அவர்களை
வீழ்ந்து விடாமல்
வாழ்வதே
இம்மண்ணிற்கு
நாம்
செலுத்தும் நன்றிக்கடன்...!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..