இல்லறம்
என்பது இனிய நல்லறமாவது இருவரின் மனங்களின் இணைப்பால் ஏற்படும் பிணைப்பு அன்றோ?
இதில் நீயா நானா என்பதால் ஏற்படும் இழப்புக்கள் எத்தனை, எத்தனை?
போட்டியிட இது போர்க்களமோ,விளையாடி வெற்றி பெற ஆடுகளமோ இல்லை.
அரவணைத்துச் செல்ல வேண்டிய அன்புக்களம்.
மூத்தோர் இதனை உணர்ந்தனால் மூழ்கித் திளைத்தனர், முன்னுதாரணமாயினர்.
இன்றைக்கு நம் நாட்டின் திருமண வாழ்வு திருத்தமாய் உள்ளதா? திரும்பிய பக்கமெல்லாம் குழப்பம்.
துரும்பான பிரச்சனையை பெரிதாக்கி மணமுறிவென்பது சாதாரணமானது.
ஆண் என்றாலும் பெண் என்றாலும் அன்பை ஆயுதமாக்குவோம்,
அறிவிற்கு முக்கியத்துவம் தராமல் தத்தம் இணையின் மனதிற்கு மதிப்பளிப்போம், இல்லறம் என்பது இனியப் பயணம் என்று நம் எழில் மிகு வாழ்க்கையால் எடுத்தியம்புவோம் இளைய தலைமுறைக்கும், இவ்வுலகிற்கும்.