சிலருக்கு ஏணிகள் அவர்கள் அப்பாக்கள்
சிலருக்கு ஏணிகள் அவர்கள் அம்மாக்கள்
உலகில் பலருக்கு ஏணிகள் ஆசிரியர்கள் தான்
ஆசிரியர் அனைவரையும் மேலேற்றத்தான் ஆசைப்படுகிறார்
பலர் உச்சிக்கு செல்கின்றனர்
சிலர் மேலேற முடியாமல் பாதியிலேயே நிற்கின்றனர்
ஆசிரியர்களுக்கு
நாடாளும் மன்னனின் மகனானாலும்
உணவின்றி வாடும் ஆண்டியின் மகனும் சமம் தான்
மெல்லக் கற்போனாய் இருந்தாலும்
புத்திசாலியாய் இருந்தாலும் பேதமில்லை
மனநலம் குன்றியவனாய் இருந்தாலும்
மாற்றுத் திறனாளியாய் இருந்தாலும் மாறுபாடில்லை
பேதங்களின்றி பாடங்கள் சொல்லி
மாணவர்கள் மனநிலை புரிந்து
அவர்கள் திறமை அறிந்து
அதில் அவனை மின்னிட வைப்பவர் ஆசிரியர்
வாழ்க்கையில் உயல்நிலை செல்லும் மாணவரை கண்டு பெருமைப்படுபவர் ஆசிரியர்
முன்னேற முடியாமல் தவிக்கும் மமாணவரைக் கண்டு வருத்தப்படுபவரும் ஆசிரியர் தான்
ஏணிகள் பலவாய் இருக்கலாம்
தன் நோக்கம் அனைவரையும் மேலேற்றுவது தான்
அனைத்து ஆசிரியர்களுக்குமிருக்கும் ஒரே பேராசை
தம்மிடம் பயிலும் மாணவர் அனைவரும் முன்னேற வேண்டும் என்பதுதான்
ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
மாணவர்கள் முன்னேற உறுதுணை புரிவோம்
தி.பத்மாசினி