நேருக்கு நேர் இரு இமயங்கள் வந்தன,
நேரு என்றும் காந்தி என்றும் அறிமுகம் செய்தன,
நேரலையில் அவையிரண்டும் பயணிக்கத் துவங்கின,
ஓரணியில் அவைமுறையே முன்னேறிச் சென்றன,
ஒற்றுமையுடனே வெள்ளையனை எதிர்த்தன,
விதவிதமாய் புது புதிதாய் போராட்டம் துவங்கின.
ஏதிந்த மலைகளெனத் திகைக்கிறான் வெள்ளையன்,
என்னதிந்தப் போராட்டம்?
தவிக்கிறான் பரங்கியன்,
எப்படித் தடுப்பது கொதிக்கிறான் அன்னியன்,
சிறைப்படுத்தி தனிமைப்படுத்தி மகழ்கிறான் ஆங்கிலன்.
சிறைச்சாலையோ அங்கு அறச்சாலையானது,
தேசமோ நீதி கேட்டு வீதிக்கு வந்தது,
அடக்குமுறைகளோ அடிபணிந்து நின்றது,
வேறொரு வழியின்றி சுதந்திரம் தந்தது.
ஒருமலை நாட்டிற்காய் உயிரையே கொடுத்தது,
மறுமலை தேசத்தைத் தோளிலே சுமந்தது,
புதியொரு இந்தியா உவப்புடன் மலர்ந்தது,
புதுமைகள் பலவற்றைப் புகுத்தியே மகிழ்ந்தது.
இமயத்தின் மேல் இரு குன்றுகள் முளைத்தது,
இமயத்தை விடவும் உச்சத்தில் நின்றது,
இமயமோ அதைப்பார்த்து இறுமாப்பு கொண்டது.
*சுலீ. அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.
