தாய்மீது கொண்டகாதல்
காந்தியின் மதிப்பில் பெண்கள்
உயர்ந்துநின்றார்கள்!
வீடாயினும் சரி
நாடாயினும் சரி
ஆணும்பெண்ணும்
சரிக்கு சரிபாதி
உயர்வும் தாழ்வும்
அவர்களுக்குள் இல்லை என்பதே
காந்தியின் பாதை!
இதற்கு அத்தாட்சி
விடுதலைக் களத்தில் ஆணுக்கு
சரிநிகர் சமானமாய்ப்
பெண்களும் பங்கேற்றிருந்தனர்!
தாக்குதல் நேர்கையில் பெண்களின் நகங்களும் பற்களும் ஆயுதம் என்றார் ஆயுதமின்றி விடுதலை வாங்கித் தந்த காந்திமகான்!
தாக்குதலுக்குப் பலியான பெண்களுக்கு வாழ்வுதர முன்வரும் இளைஞர்கள் வீர இளைஞர்கள் என்று கொண்டாடினார்!
சீதனமின்றி பெண்ணையே சீதனமாகக் கருதவேண்டுமென்றார்!
சாதிமதப் பாகுபாடுகளின்றி
அனைத்துப் பெண்களுமே சக்தியின் ரூபங்களாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றார்!
அதன்படி வாழ்ந்தும் காட்டினார்!
த.ஹேமாவதி
கோளூர்
