அறிவியல்
செய்தது...
அற்புதம்...
?????? ???????
உயர் ரகம் எனும்...
உன்னதப் பெயரில்.
ஆண்டுக்கு
ஐந்து கிலோ
கிடைத்த
கொய்யா...
ஆச்சர்யப்படுத்தின
ஐம்பது கிலோவை
தாண்டி...!!!!!!
பருவத்துக்குப்
பத்தே முட்டைகள்
கொடுத்த
கோழிகள்...
அடுக்கடுக்காய்...
இட்டன
முட்டைகள்...!!!
மணிக்கு
முப்பது கி.மீ தொலைவு...
பயணித்த
வாகனங்களின்
உச்ச வேகம்
இன்றைக்கு...
முன்னூறு...!!!
அவற்றின்
எண்ணிக்கையோ...
எண்ணிலடங்கா...
பக்கவாட்டில்
பரவிய
வீடுகளெல்லாம்...
வளர்கின்றன
வானத்தைப்
பார்த்து...!!!
ஏனிந்த
பெருக்கம்...???
என்றேன்.
மக்கள்தொகை
பெருக்கத்தின்
விளைவே...
என்றது
அறிவியல்.
ஐம்பது
ஆண்டுகளாக...
மண்டையைக்
குடைந்து...
இவற்றை
கண்டுபிடித்த
அறிவியல்...
மக்கள்
பெருக்கம்
குறைக்க...
ஏதாவது...
கண்டிருக்கலாம்
சட்டென்று...!!!
ச.சந்திரசூட்