உழைத்துக் களைத்தவர் நிம்மதியாய் உறங்கிட,
தொய்வை நீக்கி உய்வுறச் செய்திட,
அயற்சியை மாற்றி உயர்ச்சியைத் தந்திட,
ஓய்வே உன்னை வரவேற்கிறேன்.
தளர்ந்த மனத்தினை களிப்புறவைத்திட
கவலையை ஒழித்து மகிழ்ச்சியை அளித்திட,
மன அழுத்தம் ஒழித்து புத்துணர்வளித்திட,
ஓய்வே உன்னை வரவேற்கிறேன்,
உன் வரவை இனிதே எதிர்பார்க்கிறேன்.
ஓய்வு எடுப்பவர் உடல் நலம் சிறக்க
முழுமனதோடு நான் பிரார்த்திக்கிறேன்,
தளர்ச்சியில் இருந்து மீட்சிபெற்ற உடனே
ஓய்வே உனக்கு ஓய்வளிக்கிறேன்.
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.