பேசத்தெரிந்த நாம்
பேசுகிறோம்!
பேச்சே மனங்களின்
இணைப்புப்பாலம்!
பேசுவதற்கு முன்
யோசிக்கவேண்டும்!
பேசும்பேச்செல்லாம்
கொழுநெல் பேச்சா?
பதர்நெல் பேச்சா?
கொழுநெல் எனில்
பேசுக பேசுக!
பதர்நெல் எனில்
யாருக்கென்ன லாபம்?
வளமான மொழியாம் தமிழினையெடுத்து
கடலிற் புளியைக் கரைத்தல்போல
பேசுதல் விடுப்போம்!
அழகிய தமிழில்
தேவையான நேரம்
இன்றியமையாத
வளமான சொல்
பேசிடுவோம்!
உள்ளம் நிறைந்து
மகிழ்ந்திடுவோம்!
பயனற்ற சொல்
பேசுதலும் குற்றமே!
பயனுள்ள சொல்
பேசாமையும் குற்றமே!
வளவள பேச்சும்
அரட்டைப் பேச்சும்
ஊறுகாயாய்த் தொட்டுக் கொள்வோம்!
கொழுநெல் பேச்சினை முழுசாதமெனக்
கொள்வோம்!
த.ஹேமாவதி
கோளூர்