Header Ads Widget

Responsive Advertisement

ஆதவனை மறைத்தவள்


ஆதவனின் ஒளியெடுத்து அதையே தான் பிரதிபலித்து
இரவினிலே ஒளிகொடுத்து இதயங்களைக் கவர்பவளே

கணவனில்லா வேளையிலே தன் பொறுப்பை உடன் உணர்ந்து
குடி காக்கும் கடமை செய்யும்
பெண்களைப் போல் ஒளிர்பவளே

இரவினிலே மட்டுமன்றிப் பகலினிலும் உன் இருப்பைக்
காட்டிவிட ஓரிருநாள் கதிரவனை மறைப்பவளே 

ஆதவனை நீ அணைக்க அணைப்பினிலே அவன் அணைய 
ஒரு பகுதியில் மட்டும் ஓரமாய் முகம் தெரிகிறதா

மாதவனின் அருளோடு ஆதவனின் அருளொளியும் மேதினியில் இல்லையென்றால் காசினியின் கதி என்ன.

ஆதவனை அணைத்தவளே மகாதேவன் சிரத்தவளே
நிலமகளுக்குன் சக்தி காட்டிவிட்டாய் நிலாமகளே

வழியில் நின்று மாறிவிடு ஆதவனை ஒளிரவிடு
ஆதவனின் கிரணத்தை பூமியிலே தவழவிடு

ஞாயிறுக்கு வழிவிடு ஞாலத்தை வாழவிடு.

*கிராத்தூரான்*