யாரோ என் பேர் சொல்லி
அழைத்தது போல ஒரு உணர்வு....!
என் மனம் பச்சைக்குழதையாய்
அடம்பிடித்தே திரும்பியது !
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
காணவில்லை நான் எவரையும்....!
எதிர்பார்ப்பின் தோல்வியில்
விழிப்பௌர்ணமிகள் கரைந்தன!
காற்றிடம் விசாரித்தேன் அதுவும்
வெற்றிடமானதே உயிர் விழுங்கி..!
நீள் வான எல்லைவரை நோக்க சட்டென முளைத்ததே அமாவாசை!
வானவில்லின் ஏழுவண்ணங்களை
வரிசைமுறையில் பிரித்த போதும்......
நிறங்கள்மாறுபட்ட போதும் அவை
தந்த ஒரே விடை என்னை *அழைத்தது காதலாம்*!
புல்மீது தூங்கும் பனித்துளியூடாக
நுழைந்து வந்த வண்ணத்துப்பூச்சி
தன் பட்டுச்சிறகு உலர்த்தியவாறே
தந்த விடையிலும் பூத்தது காதல்!
காமப்போர்வைப் போர்த்தி
வருவது அல்லவாம் காதல்!
காலம் போற்றும் பதிவுதான்
கள்ளமற்ற குழந்தைபோல் காதல்!
செம்புலப்பெயல் நீராம் காதல்!
செம்மையுரு மனவயலில் அதை
சீருடன் வளர்த்து பயிராக்க
நேரிய வழி பல காண்போம்!
யாருக்கு தெரியும் என்னை
அழைத்திட்ட காதலின் குரல்
அழைக்கலாம் எவரையும்......
எந்தகணத்திலும் இயற்கையின்
இமை ஒளிரும் சிரிப்பிலும்.....!
🌹🌹வத்சலா🌹🌹