Header Ads Widget

Responsive Advertisement

இலக்கு



முழுமதிப்பெண் பெறவேண்டும்,
முதல் தரத்தில் வரவேண்டும் இது மாணவர்கள் நிர்ணயித்த இலக்கு,
நிர்ணயித்துப் படிக்கின்ற இலக்கு.

மருத்துவராக ஆகவேண்டும்,
ஆட்சியராக ஆகவேண்டும்
இலக்கோடு படிக்கிறார்
பலபேர்,
இலக்கை நோக்கி நகர்கிறார் பலபேர்.

நல்லவேலையில் சேரவேண்டும்
நன்மதிப்போடு வாழவேண்டும்
இலக்கோடு இருக்கிறார்கள் இளைஞர்கள் பல பேர்,
துடிப்போடும் இருக்கிறார்கள் இளைஞர்கள் பல பேர்.

நல்ல லாபம் பெறவேண்டும்
இன்னும் பணம் சேர்க்கவேண்டும்
இலக்கோடு உழைக்கிறார்கள் முதலாளிகள் பலபேர்,
முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள் பலபேர்.

இத்தனை கோடிக்கு விற்கவேண்டும் என்றும்,
இத்தனை நாளில் விற்கவேண்டும் என்றும்
இலக்கோடு செயல்படுகிறார்கள்  இங்கே சிலபேர்,
இலக்கிற்காகத் துரத்துகிறார்கள் இன்னும் சிலபேர்.

ஒன்றுமட்டும் நிச்சயம், தயக்கமின்றிச் சொல்வேன்
பண்டிகைகளை மக்கள் வரவேற்கிறாரோ இல்லையோ
கண்டிப்பாக வரவேற்பர்
இலக்கு நிர்ணயிப்பவர்கள்.

அதிசயம் நிகழ்த்துகிறது இலக்கு, உண்மை.
அற்புதம் நடத்துகிறது இலக்கு, நிஜம் தான்.
சரித்திரம் படைக்கிறது இலக்கு, சரிதான்.
சரிப்படுமா இந்த மதுபான இலக்கு?

சுலீ அனில் குமார்