Header Ads Widget

Responsive Advertisement

தளிர்கள் பசியறுப்போம்!



கண்ணே மணியே சுடர்வீசும்  நான்பெற்ற
......தண்ணிலவே என்றெல்லாம் கொஞ்சிடவே__ ஈன்றெடுத்த
.........அன்னையோ தந்தையோ அற்ற மழலையர் 
........மென்பசிக்குச் சோறிடல் நன்று!
.............................(1)

ஆலயம் சென்றாங்கே ஆண்டவன் மேனியில்
.....பாலூற்றி ஆனந்தம் கொள்வதைக்__
காட்டிலும்
......பாலூட்ட யாருமில்லா பிஞ்சு மழலையர்
....பாலுண்ணச் செய்தல் உயர்வு
...............................(2)

தாய்தந்தை அற்றவர்கள் உண்ணாமல் வாடிநிற்க
......வாய்நிரம்ப உண்டியலில் காசெதற்கு?__தீவினை
போய்விடுமா நல்வினைதான் கூடிடுமா ஏழைகள்
.......வாயெல்லாம் உண்டிடுமா என்ன?
............................(3)

பெருஞ்செல்வம் வேண்டாமே நல்லமனம் போதும்
......அரும்பசிக்கு உன்உணவில் ஓர்உருண்டை__தந்தாலும்
.......போதுமே ஆலயத்தில் காணிக்கைச் செய்வதினும்
........கோதிலா நற்செய லாமே
............................(4)

த.ஹேமாவதி
கோளூர்