உயிருக்கும் உணர்வுகளுக்கும்
இடையே நடக்கும்
இடையறாத உலகப்போர்!
இரவில் சூரியன் சுட்டெரிப்பதும்...!
பகலில் நிலவு குளிரவைப்பதுமான
குருசேத்திர யுத்தம்.......!
இதில் மட்டுமே சாத்தியம்!
புவியில் வலியோருக்கு. சொர்க்கம் அளித்து வெல்லவும்....
எளியோர் வாழ்வை நரகமாக்கி
கொல்லவும் *இதற்கு* மட்டுமே
தெளிவாய்த் தெரியும்!
உறக்கம் தொலைத்து
கனவைத் தேடவும்.......!
இதயம் தொலைத்து
உணர்வுகளோடு வாழவும்....!
கற்றுத்தரும் மரண குருவாகும்!
உளரல்களையும் இசையாய் வடிக்கும்
மந்திர இசைக்கருவி!
கிறுக்கல்களை கவிதையாய்
வடித்துத்தரும் மாயஎழுத்தாணி!
மௌனங்களுக்கு ஒலிதந்தும்.....
வார்த்தையொலிகளை
மௌனமாக்கும் மாயாவி இது!
சண்டைகளையும் சமயத்தில் ....
முத்தத்தில் முடித்து வைத்து
மோதல்களின்றியே இதயம்
உடைக்கும் மாய சுத்தியல்!
நெஞ்சம் கொஞ்சம் சிறகடித்துப்
பறக்கும்போதே இதயத்தைக்
கொன்று வீழ்த்தும் மாயவித்தை!
தன்னந்தனியே சிரிக்கவைத்து....
தனிமையிலே க (சி)தறவைக்கும்
மாயம் ஒளித்த ஔதடம்!
இதனது பூகோளப்பாடத்தில்.....
எப்போதும் பூமி மேலாகவும்
வானம் கீழாகவும்.......!
வரையறை செய்யப்பட்டிருக்கும்!
இதுபோன்ற இன்பமும் இல்லை!
இதுபோன்ற துன்பமும் இல்லை!
இந்தப் புரியாத புதிரின் பெயர்தான்...
*வாழ்க்கை*.
🌹🌹வத்சலா🌹🌹