Header Ads Widget

Responsive Advertisement

சர்வதேச கவிதைகள் தினம்

சர்வதேச கவிதைகள் தினம்

மார்ச்-21

கற்பனையின் பிள்ளைகளே ! கவிதைபாட வாருங்கள் !
விற்பனைக்கு தமிழில்லை ! வேதமென்று கூறுங்கள் !
கொஞ்சுதமிழ் கோவைத்தமிழ் கோடியென பாடுங்கள் !
கொங்குதமிழ் எங்கள் உயிர் எங்குமதைத் தேடுங்கள் !
உலகமெங்கும் நமதுதமிழ் வாழ்கவென்று சொல்லுங்கள் !
உயர்த்தமிழை உயிர்த்தமிழாய் உணர்ந்துகொண்டு செல்லுங்கள் !
செல்லுமிட மெல்லாம்நம் செந்தமிழைப் பேசுங்கள் !
வெல்லுமிட மறிந்தபின் வீரவாள் வீசுங்கள் !
உலகமெங்கும் கவிதைசெயும் கவிஞர்களுக் கெல்லாம்
உளமாற வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே!

கவிஞர் ந.டில்லிபாபு