அன்பு நண்பா ...
பேச மறந்துவிட்டேன்
தந்தையிடம் பேச மறந்தேன்
தகுதி இழந்தேன்
அன்னையிடம் பேச மறந்தேன்
அன்பை இழந்தேன்
மனைவியிடம் பேச மறந்தேன்
பாசத்தை இழந்தேன்
பிள்ளைகளிடம் பேச மறந்தேன்
பொறுப்பை இழந்தேன்
குடும்பத்திடம்பேச மறந்தேன்
குதூகலம் இழந்தேன்
ஆசிரியரிடம் பேச மறந்தேன்
அறிவை இழந்தேன்
உற்றார் உறவினரிடம் பேச மறந்தேன்
உறவின் உன்னததை இழந்தேன்
என்னுடன் பேச மறந்தேன்
ஆரோக்கியத்தை இழந்தேன்
என் அருமை நண்பா .
பேசு பேசு உறவோடு உறவாட
மறவாது பேசு...
என்றும் அன்புடன்
பழனி. கே.ஏ.டி.செந்தில் குமார்.