ஊரடங்கும் .. இரவில்
தெருவோரக் கடைமுன்
இருட்டில் ....குளிரில் தனிமையில்.....
எங்கேயோ எதையோ பார்த்துக் கொண்டு..
யார் மனதும் இளகிவிடும்..
கல் நெஞ்சும்
கரைந்து விடும் ..
பலருக்கு வாழ்வளித்து சிலருக்கு ..சிறுமை தந்த நிலை கண்டு நெஞ்சம் விம்மும் ...
வாழ்வு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இருக்கக் கூடும்...
யாரோ வஞ்சித்து இருக்கவும் கூடும் ..
நோய் கண்டு விலக்கி வைத்து இருக்கவும் கூடும் ....
எதுவோ ?..எப்படியோ..? நிற்கதியாய் ..நிலை ..
இந்தியாவின் செல்வங்களில்
இல்லையா பங்கு
இவர்களுக்கு ..?
யாரிடம் கேட்பது? என்ன தான் செய்வது .?..
எப்படி எதைக் கொண்டு நான் பெருமிதம் கொள்வது ...?
'இனி ஒரு விதி செய்வோம்' சொன்னானே பாரதி .....
இருளும் அற்று ..
தனிமை யற்று ..
குளிரு மற்று ....
வறுமை யற்று ...
தனி ஒருவன்... தனி ஒருவன் யாவும் பெற்று
வாழச் சொன்ன... வழி அது ... செய்தோமா நாம் அது? இனி ஒரு விதி செய்வோம் இனியாவது..
M.Deivanai
Minjur.