கண்ணோடு கண்டதெல்லாம் கல்யாண நாளினிலே உன்னோடு கண்டது தான் உண்மையான புன்னகையே,,,
என் முகத்தில் வந்ததெல்லாம் இடைவெளியில் போவதற்கு
உன் முகத்தில் கண்டது தான் உயர்வான புன்னகையே,,,
கனிவான புன்னகையில்
கார்மேகம்
போல் வருவாய்
துணிவாகி செயலினிலே
தூயவளாய்
நீ சிரிப்பாய்,,,
தெளிவான அன்பினிலே
தேன் கலந்து எனைக் காத்து
நோய் தீர்க்கும் மருந்தாக நான் கண்ட புன்னகையே,,,,!
எந்நாளும் உன்னிடமே இறைவன் தந்த சுயவரமே
பொன்னா வாழ்க்கையிலே
புரிந்து நின்ற நாயகியே,,,!
அன்பான சொல்லாலே
அரவனைக்கும் சுந்தரியே,,,,
அழகான தமிழாலே
தினம் உதிர்க்கும் புன்னகையே,,,,!
பண்பான புன்னகையில்
என்னை மாற்றி பார்க்கையிலே
பார் போற்ற
புகழடைவாய்
நீர் பூத்த தாமரையே,,,!
பல நாளு
ஆனாலும்
மண நாளு
மாறாமல்,,,
எந்நாளும் திருநாளாய்
உன்னாலே
நான் கண்டேன்
புன்னகையால்,
உன் வெற்றிப்
புன்னகையால்,,,✍🏻
பாலா