Header Ads Widget

Responsive Advertisement

கடவுள் கொடுத்த வரம்

தாய் இரண்டு அக்காவுடன் பிறந்தவர்களுக்கு மட்டும்.



அக்கா.


மாதா ஊட்டாத சோற்றையும்

ஊட்டி வளர்ப்பவள்.


அம்மாவின் செல்ல அதட்டல்களில் இருந்து

காப்பவள்.



அக்காவுடன் பிறந்தவர்களுக்கு

எப்பொழுதுமே தெரிவதில்லை

அக்கா

இன்னொரு தாய் என்று.


அதுவும் அவளுக்குத்

தம்பியாய் பிறந்துவிட்டால்....

அப்பப்பா....


அவள் மூச்சு முடியும் வரை

தம்பி...தம்பி...தம்பிதான்..


சொல்லிக் கொடுப்பதில்

சோறூட்டி வளர்ப்பதில்

பள்ளிக்குக் கிளப்புவதில்...

தலைவாரி சீவுவதில்...

உடையணிந்து

விடுவதில்...

ஆடைகளைத் துவைப்பதில்...

இது தம்பிக்கு என எடுத்து வைப்பதில்...

எங்கிருந்தாலும் தம்பிக்காய் துடிப்பதில்...


மொத்தத்தில்

தன்னுடைய பிள்ளையாய் பார்ப்பதில்..

அக்கா என்றைக்கும் 

இன்னொரு தாய் தான்.


தாயல்ல...

இன்னொரு தாய் என 

நாம் கூறுவது தெரியாமலேயே

தன்னுடைய மூத்த பிள்ளை என

சொல்லித் திரியும்

சுயநலமில்லாத

உள்ளத்துக்குக் சொந்தமானவள் அக்கா.


அம்மாவின் ஒட்டு மொத்த அன்பையும்

கடவுள் இன்னொருவளுக்குக்

கொடுத்தானென்றால்

அவள் தான்

அக்கா...


அக்கா...

இன்னொரு தாயல்ல...

அவள்

பிறந்ததிலிருந்தே

தாய் தான்.




பல நேரங்களில் நினைத்ததுண்டு...

நமக்கு ஒரு அக்கா இல்லயே...

அக்கா இல்லாத

என்னைப் போன்றோருக்கு

அவள் என்றைக்குமே தாய் தான்.



செம்மொழி.சிபிராம்.