காலையில் எழுந்த கதிரவனை
கும்பிட்ட பின்னே நான் செல்வேன், செல்லும் வண்டியில் இரு காளைகளை பூட்டியே
ஓட்டும்
மாட்டு வண்டி,,,
ஊருக்கு நானும் போனாலும்,
சந்தைக்கு வண்டி சென்றாலும் மாடுகள் ரெண்டும் ஆடிக்கிட்டே
மகிழ்ந்து நானும் பாடிடுவேன்,,,
கொம்புகள் ஆட நானாட
குளத்துப் பக்கம் பார்த்து விட்டால்
கரையைப் பார்த்து ஒதுங்கி விட்டு
கண்களை சிமிட்டி
அடித்திடுமே,,,
குப்பையடிக்கும் ஒரு நாளு,
கூட்டு வண்டியாய் மறு நாளு
தினம் தினம் வேலையில் மாறிக் கொள்ள
காளையை,
கடத்த
வந்தவன்
ஒரு ஆளு,,,,
காளைகள் ரெண்டும் கத்திடத்தான்
வந்தவன் சாலையில்
ஓடிவிட,,,,
வண்டியை என்னை ஒட்ட சொல்லி
கண்ணை
சிமிட்ட
கார்மேகம்,,,
புயலாய்ப் பறந்து போகையிலே
மாட்டு வண்டி போலில்லை,,,
மறைந்தவன் அங்கு ஒழிந்திருக்க,
கண்டு கிழித்தது
அவன் வேட்டியினை,,,
திருடனை பிடித்து கொடுத்து விட்டு காளைகளிரண்டும் கண் சிமிட்ட,,,,
என்னைக் கண்டவள் இன்னொருத்தி
வண்டியில், இடத்தை கேட்டு நின்றாள்,,,,
வந்தவள் அவளும் அத்தை மகள்,,, மாட்டு வண்டியிலேறி அமர்ந்திடவே
வந்தனம் செய்து
கண் சிமிட்டி
காளை,
சிட்டாய் பறந்தான் சாலையிலே,,,
பாலா