Header Ads Widget

Responsive Advertisement

அன்றைய பேனா இன்றைய பேனா,,,



அன்றைய பேனா
நிலையானது,,,
அன்றைய மனிதர்கள் மனசு போல,,,,
மையை மட்டும் தீர தீர ஊற்றினார்,,,
தோண்ட தோண்ட ஆற்றின் ஊற்றைப்போல,,,
மனிதனுக்கு கவலைகள் வருவது போல கசியவும் செய்தது, அது
சட்டையில் பையில் இருந்தும் கூட கெளரவம் தந்தது,,,
படிப்பாளி என்ற பட்டத்தை வாங்கியும் தந்தது,
பவுண்டன் பேனா
பெயர் பெற்று
பேனாவிலே உயர்ந்தும் நின்றது.
கண்டவர் கேட்க பயந்து நின்றார்,,,
காரணம்,
பிறன் பொருள் நோக்கா
பரம்பரை கொள்கையது,,, !

இன்றைய பேனா இன்று இருக்கும் மனிதரைப் போல,,,
தேவை என்றால்
வைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் தெருவில்
வீசலாம்,,,
காசு பணம் இருக்கும் வரை அருகிலிருக்கும் சொந்தம்,
அது காலியானதும் வெளியில் போயும் பெயரை கெடுக்கும்,,,
இன்றைய மனிதரைப் போல பேனாவையும் படைத்து விட்டானா?
மனிதன்,
பேனாவைப்
போல் தன் குணத்தை எல்லாம் மாற்றிக் கொண்டானா?
இந்தக் கால  தோற்றத்தில் அழகுப் பேனா முடிந்தவுடன் குப்பையிலே,,,
அந்தக் கால பேனாக்களும் மை இல்லாமலும் இன்றும்
நிற்குது
சட்டைப் பையினிலே,,,,


பழமை மாற மாற மனிதன்  குணமும் பொருள்களைப் போல் மாறிப் போயாச்சு,,,
பழமையான பேனா போல் நாமிருப்போம்! சமுதாய சிந்தனையில் என்றும்
உயர்ந்து நிற்போம்!!

பாலா