நீயுமில்லை நானுமில்லை
நம்
நிழல் கூட
அவ்வார்த்தை கேட்க நியாயமில்லை,,,
உள்ளதை சொன்னவன் முட்டாளானான் உண்மையை மறைத்தவன்
ஊருக்குள்
திறமை
ஆனான்,,,,
அறிவாளி என்று வந்தவரெல்லாம் முட்டாள் படியை மிதித்தவராவார்,,,
முட்டாள் என்பது குறைபடியில்லை,
முழுமையில்லா சிந்தனை தானே!
அறிவாளியாக வந்தவரெல்லாம் முட்டாள் என்ற மூலதனத்தாலே,,,
அறிவைப் பெற்று இருப்பவருக்கும் முட்டாள் நிலையும் மூ(லை) ளையிலிருக்கும்,,,,
அது எட்டாதிருந்தால் அறிவாளி
என்பார்,,,
சூழ்நிலையாகி தொட்டு விட்டால்
குற்றவாளி ( முட்டாள்)
என்பார்,,,,,
யார் முட்டாள்?
சூழ்நிலையே!
பாலா