வேகா வெயிலிலும்           வாகா எல்லையே

மூச்சுகாற்றுக்காய்

திணறிக்கொண்டிருந்தது!

அனுதினமும் அங்கு கூடும்கூட்டம் இயல்பானதே!

இன்றையக்கூட்டமோ

இயல்புக்கு மாறானதே!

ஓவ்வொர் கண்களிலும்

வானவில்  எதிர்ப்பார்ப்புகள்!

வான் வீரன் அபினந்தாவுக்கா

                                          க!

சக்கர வியூகத்தில் சிக்கி மாண்டுபோக இவனென்ன

புராண அபிமன்யூவா?

மீண்டு வரும் வழிதெரிந்தவன்!

தன்னம்பிக்கையை....

தன் தாய்நாட்டை 

உயிரெனக்கொண்டவன்!

வீரனின் மைந்தன்

மாவீரனே !என்பதை

நிரூபித்த சுத்தமான இரத்தத்துக்கு சொந்தக்காரன்!

இன்று இந்தியர் அனைவரின்

அபிமானத்தின் பந்தக்காரன்!

எதிரி நாட்டவர்களுக்கும்

இதயமுண்டு அந்த இதயத்துக்குள்ளும் ஈரமுண்டு என்பதை

உள்ளங்கை நெல்லிக்கனியாய் உலகத்துக்கே வெளிச்சம்

போட்டுக்காட்டியவன்!

இளைய சமுதாயத்தின் 

விடிவெள்ளி!

நாளைய இளைய பாரதத்தின் சாரதியிவன்!

புனர்ஜென்மம் எடுத்துவந்த

புதிய விடியலே !வாழ்க என்றுமே!

🌹🌹வத்சலா🌹🌹