*மாயக்கண்ணாடி*
கண்ணாடியே
இஃதென்ன விந்தை?
மாயக்கண்ணாடி
ஆனாயோ?
நான் உன்முன்னால் நிற்க நீயோ
என்னத்தானின் உருவத்தைக் காட்டி
முறுவலிக்கின்றாயே!
இரகசியமாய் என்னுள் இருக்கின்ற காதலனை இப்படி பகிரங்கமாக வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுகிறாயே!
என் முகத்தைக் காட்டச்சொன்னால் என்அகத்தைக் காட்டுகிறாயே!
இப்படித்தான் அவர் உன்முன்னால் நின்றால் என்னைக் காட்டுவாயோ?
த.ஹேமாவதி
கோளூர்