தொலைதூரக் கதிரவனின் தழுவலால் பூமிக்கு
ஆனந்தம்!
அத்தழுவலால் உண்டாகும் பேரொளியால் உலகெங்கும் வெளிச்சம்!
விடியலில் துவங்கி மாலைவரை நீடிக்கும் அவ்வெளிச்சமே வெயிலாகும்!
ஏழுவண்ணங்களைத்
தன்னுள் அடக்கியும்
வெள்ளைமனதோடு
சிரிக்கும் வெயில்
அது இல்லாவிட்டால் ஏது உலகு?ஏது வாழ்வு?
ஓருயிர்த்தாவரங்களின்
ஆதாரமே வெயிலாகும்!
தாவரங்கள் இல்லையெனில் நமதுகதி என்னவாகும்?
விடியலில் தொடங்கும் மழலைக்கதிரவனின்
மிதமான வெயிலென்றால்
நமது தேகத்திற்கு இதமான சுகமாகும்!
இளஞாயிறு வழங்கும் இளவெயிலில்
காலையும் மாலையும் மூழ்குதல் சுகமானதொன்றாகும்!
உயிர்களின் இயக்கமே வெயிலின் கொடையாகும்!
நண்பகல் வெயிலென்பது உச்சிவெயிலாகும்!
கதிரவனின் உச்சவெயிலாகும்!
வாழ்வின் எல்லா இயக்கச்செயல்களையும்
வெயிலன்றோ நடத்திடும்!
வெயிலென்பது மழையின் கருவறையாகும்!
வெயிலாலன்றோ
நீர்த்துளிகள் விண்ணிலேறி கருமுகிலாய் மாறி மழையென மீண்டும் மண்ணிலே வீழும்!
நிழலின் அருமை வெயிலில் தெரிவதைப் போல
வெயிலின் அருமை
மழையில் தெரியும்!
ஊறுகாய்களும் வற்றல்வடாகங்களும்
மண்பானைகள் செங்கற்களும்
உப்பும் கருவாடுகளும்
யாவும் வெயிலென்ற ஆற்றலின்றி உருவாகிடுமா?
வெயிலென்னவோ எப்போதும்போலத்தான்
காய்கிறது!
நம்மால் உருவாகும்
மாசுறுதல் காரணமாய் ஓசோனில் ஓட்டைகளை உண்டாக்கிவிட்டு
பாவம் அந்த கதிரவனைத் திட்டுவது எந்தவிதத்தில் நியாயம்?
த.ஹேமாவதி
கோளூர்