விடிந்த பின்பும்
வெளிச்சம் வரவில்லையே என வாடிநிற்கின்றாயோ?
உன் வீரம் விழுத்தெழுந்தால்
உலகத்தையேகையோடு புரட்டிப்போடலாம்தெரியுமா
கடந்த காலத்தை நீ
நடந்துவந்த பாதையைச்
சற்றேத்திரும்பிப் பார்! நீ
போதித்த விடயங்களைவிட,
சாதித்த விடயங்களைப்
பட்டியலிடு!
நிச்சயம் உன்மதிப்புசுழியமே
கத்தியின்றி ரத்தமின்றி நாம்
பெற்ற சுதந்திரம் இன்று.....
சத்தமின்றி சாகடிக்கப்படுவ
தை
மெத்தனமாய்பார்த்துக்
கொண்டிருப்பானேன்?
நாட்டை உனக்காக வளைப்
பதை விடுத்து
நாட்டுக்காக உன்னை வளை
—த்நுப்பார்!
வானவில்லின் ஏழு வண்ணத்
—தையும்
சுழற்றியடித்து வெள்ளைநிற
-த்தை
நிலைநிறுத்தும்ஆதவன்போ
சமூக அவலங்களைச்
சுழற்றியடித்து ஒற்றுமை
எனும் ஒரே நிறத்தை
நிலை நிறுத்துவாய்!
முன்னோர் உன்போல்
சோம்பியிருந்திருந்தால்..,,,,,
பசுமை கொழுத்திருக்குமோ
இந்த பூமி?
அன்றவர்கள்சிந்தியவியர்வை
இன்று வயல்களில் பயிராய்!
பூமிக்குள் புதையலாய்!
சாமிக்கு சப்பரமாய்
சூரியனையே எழுப்பிய
சாதனைச்சேவல்களாய்!
ஆதவனையே தொடுவதற்கு
ஆர்த்தெழுந்த அனுமனாய்!இன்னமும் பொங்கிக்
கொண்டேதானிருக்கின்றன
இது தெரிந்தும் கூட ஏன்
இந்த மௌனம்?
சுதந்திரபூமியை மழைநீரால்
குளிர்வித்த காலங்கள்போய்
புத்தன் பிறந்த பூமியை
ரத்த ஆறுகள் நனைத்து
நிற்கும் அவலம் ஏனென்று
சிந்தித்தாயா?
சாதீய போர்வைக்குள்
சமூகத்தை போர்த்தியவரை
சாவகாசமாய் காணவோ?
இன்று போய் நாளை வா
என்றவனின் புண்ணியபூமியில் இனியென்றும் இரக்கத்தின்
விதைகள் முளைக்கப்போவதுஇல்லை
எனும் நம்பிக்கையின்மையா
சாதிகளும் சமயங்களும்
சம்மணமிட்டு அமர்ந்து
சரிக்குச்சரியாய் தேசத்தை
நுனிப்புல்லாய் மேய்ந்து பின்
நேசத்தைப் புதைகுழிக்குள்
தள்ளுகின்ற காட்சிப்பார்.....
சித்தபிரமை பீடித்த நம் தேசத்தின் அழுக்கான
பித்தத்தைதெளிவித்துச்
சுத்தமாக்கலாம் வா!
கனவில்கூட தேசத்தின் நலனை நினையாத அரசியல்
துரியோதனர்களை
அடித்து நொறுக்கும்
காண்டீபம் ஏந்தி விஜயனாய்
நீ வந்தால்..............,
நாடே உனக்கு சாரதியாய்
மாறி நிற்கும்!!!!!!!!!!!
என் வீரனே!
விழித்தெழுந்து வா !
🌹🌹வத்சலா🌹🌹